டிக் டிக் டிக் படத்தின் முக்கிய அறிவிப்பை ட்வீட் செய்த ஜெயம் ரவி

Sasikala| Last Updated: திங்கள், 20 நவம்பர் 2017 (21:13 IST)
‘டிக் டிக் டிக்’ படம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று மாலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்ப்போவதாக ஏற்கனவே  அறிவித்திருந்தார் ஜெயம் ரவி.

 
சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டிக் டிக் டிக்’. முதல் இந்திய விண்வெளிப் படமான இதில், ஜெயம் ரவி ஹீரோவாகவும், நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். ஜெயம் ரவியின் மகன் ஆரவ், முக்கிய கேரக்டரில்  நடித்துள்ளார்.

 
இந்தப் படம் பற்றிய முக்கிய அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனால்  ரசிகர்கள் படத்தின் ரீலீஸ் தேதியா இல்லை இசை வெளியீட்டு விழா தேதியா இல்லை டிரெய்லர் தேதியா எனத் தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் இங்கே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட செய்தி அறிவிப்பதில் மகிழ்ச்சி என்றும், இதை  அனுபவிக்கவும், உலக அனுபவத்திலிருந்து!! காத்திருக்க முடியாது. டிக் டிக் டிக் படத்தின் ட்ரெய்லர் வரும் நவம்பர் 24 முதல்  என்றும், நீங்கள் எல்லோரும் அதை பார்க்க வேண்டும். இப்படம் முதல் இந்திய விண்வெளி திரைப்படம் என்பதில்  பெருமையடைவதாகவும் பதிவிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :