அஜித்தின் 'குட் 'படத்தை லூஸ் டாக்கால் இழந்த வெங்கட்பிரபு?
அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை வெங்கட்பிரபு இழந்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில், விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்பட ஷூட்டிங் இன்னும் முடியாத நிலையில், வரும் ஜூன் மாதம் முதல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்திற்கான ஷூட்டிங்கில் பங்கேற்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு வெங்கட்பிரபு ''குட் என்றால் விஜய்; பேட் என்றால் அஜித். அக்லி என்றால் பிரேம்ஜி என்று 'லூஸ் டாக்' விட்டதாகவும்; அவர் ஒரு படம் எடுக்கவுள்ளதாகவும் அதில் விஜய் ஹீரோ, அஜித் வில்லன் என்று அவர் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு ரசிகர்கள் கடும் விமர்சனம் தெரிவித்தனர்.
வெங்கட்பிரபுவின் இந்த பேச்சினாலும், அவர் அஜித்தை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் அப்போது, உடனடியாக வெளியிட்டதனாலும் தான் அவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே அஜித்திடம் நல்ல பேர் எடுக்க வேண்டி தி கோட் படத்தில் தீயாக பணியாற்றி வருகிறார் வெங்கட்பிரபு.