புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 21 மார்ச் 2024 (22:16 IST)

ரூ.20 கோடி டீலுக்கு ஒப்புக்கொண்ட அஜித்?

நடிகர் அஜித்குமார் அடுத்தடுத்த படங்களுக்கு எதிர்பார்ப்பு குவிந்து வருகிறது. இந்த நிலையில், அடுத்து, தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகிறது.
 
அதாவது, தமிழ் பட தயாரிப்பாளர் மற்றும் வெற்றிமாறன் காம்பினேசனில் அஜித் ஒரு படம் பண்ணுவதாக இருந்ததாக கூறப்படுகிறது.
 
அதற்கு அஜித்திற்கு ரூ.143 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், அதற்குள்ளாக, பிரபல தெலுங்கு படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி நிறுவனம் இடையில் புகுந்து, அஜித்திற்கு ரூ.20 கோடி அதிகமாக அதாவது ரூ.163 கோடி தருவதாக கூறவே அவர் தெலுங்கு படத் தயாரிப்பாளருக்கு படம் பண்ண ஒப்புக்கொண்டாதாகவும், இப்படம் பிரமாண்டமாக தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
 
இப்படம் பற்றிய அறிவிப்பு  விரைவில் வெளியாகும் என தெரிகிறது. ஆனால், அஜித்குமார்- வெற்றிமாறன் காம்பினேசனில் ஒரு படம் உருவாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாகுமா? இல்லை எதிர்காலத்தில் இருவரும் இணைந்து பணியாற்றுவார்களா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.