திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 மார்ச் 2024 (21:40 IST)

அஜித்-ன் ''விடாமுயற்சி'' படம் தீபாவளிக்கு ரிலீஸ்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
 
இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதில் அஜித், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
 
அடுத்தகட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் தொடங்கும் என தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், இப்படம் தற்போது லைகாவுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் விரைவில் 2 வது கட்ட ஷூட்டிங் தொடங்கப்பட்டு, இந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படத்தை ரிலீஸ் செய்ய லைகா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
ஏற்கனவே லைகா தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படமான வேட்டையன் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் என கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இன்னும் ஷூட்டிங்கே முடியாத விடாமுயற்சி தீபாவளிக்குள் முழுமையாக தயாராகி விடுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
அஜித்குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்தாண்டு பொங்கலுக்கு குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்பட ஷூட்டிங் வரும் ஜூனில் தொடங்கவுள்ளது.