புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2017 (11:07 IST)

சிவகார்த்திகேயனுக்கு அக்காவான சினேகா

‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அக்காவாக நடித்துள்ளார் சினேகா.
மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. வருகிற 22ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், பஹத் பாசில், பிரகாஷ் ராஜ்,  சினேகா, ஆர்.ஜே. பாலாஜி, ரோபோ சங்கர், ரோகிணி, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
 
24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா பிரமாண்டமான முறையில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அனிருத் இசை  அமைத்துள்ளார். குப்பத்தை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. குப்பத்தைக் கட்டுப்படுத்துபவராக பிரகாஷ் ராஜ் நடிக்க, சிவகார்த்திகேயனுக்கு அக்காவாக சினேகா நடித்துள்ளார்.