புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 ஜூலை 2022 (14:25 IST)

‘வீட்ல விசேஷம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த RJ பாலாஜி!

RJ பாலாஜி நடித்து இயக்கிய வீட்ல விசேஷம் திரைப்படம் கடந்த ஜூன் 17 ஆம் தேதி வெளியானது.

வீட்டில் கல்யாண வயதில் மகன் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்காக வீட்ல விசேஷம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் ஆர் ஜே பாலாஜி, ஊர்வசி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். போனி கபூர் தயாரித்திருந்தார்.

வித்தியாசமான ப்ரமோஷன்கள் மூலமாக கவனம் ஈர்த்த படக்குழு கடந்த ஜூன் 17 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்தது. இந்த படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்தது. ஆனால் விக்ரம் பிளாக்பஸ்டர் ஹிட்டால், இந்த படத்தின் வெற்றிக் கொஞ்சம் பாதிக்கப்பட்டதாகவே சொல்லப்படுகிறது. இந்நிலையில் வரும் ஜூலை 15 ஆம் தேதி இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி 5 தளத்தில் இந்த படம் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RJ Balaji (@irjbalaji)