1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (11:18 IST)

வெளியானது வீட்ல விசேஷம் படத்தின் அட்டகாசமான Sneak peek காட்சி!

வீட்ல விசேஷம் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

வீட்டில் கல்யாண வயதில் மகன் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களில் ஆர் ஜே பாலாஜி, ஊர்வசி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்துக்கு  வீட்ல விஷேசம் என்ற தலைப்பை வைத்துள்ளனர். படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

படத்துக்காக இதுவரை படக்குழுவினர் பல வித்தியாசமான ப்ரோமோஷன் பணிகளை செய்து வருகின்றனர். அதையடுத்து இப்போது படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. அந்த காட்சியில் ஊர்வசி கர்ப்பமாக இருப்பதை தனது மகனான R J பாலாஜியிடம் சொல்ல திணறும் கலகலப்பானக் காட்சி ரசிகர்களைக் கவரும் விதமாக அமைந்துள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RJ Balaji (@irjbalaji)