செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 15 ஜூன் 2022 (11:42 IST)

“உங்க வீட்டுக்கு குட்டிப்பாப்ப வரப்போகுது…” வைரலாகும் RJ பாலாஜியின் Prank வீடியோ

வீட்ல விசேஷம் படத்துக்காக நடிகர் RJ பாலாஜி வித்தியாசமாக பல ப்ரமோஷன்களை செய்து வருகின்றார்.

வீட்டில் கல்யாண வயதில் மகன் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களில் ஆர் ஜே பாலாஜி, ஊர்வசி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்துக்கு  வீட்ல விஷேசம் என்ற தலைப்பை வைத்துள்ளனர். படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

இந்நிலையில் ஜூன் 17 ஆம் தேதி படம் வெளியாவதை அடுத்து படக்குழுவினர் ப்ரோமோஷனுக்காக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேவயானி நடிக்கும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நடித்துள்ளனர். பட வெளியீட்டுக்கு முன்பு அவர்கள் நடித்த எபிசோட்கள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதையடுத்து இப்போது புதிதாக ஒரு Prank வீடியோவை R J பாலாஜி வெளியிட்டுள்ளார். அதில் படத்தில் வருவது போல சிலருக்கு போன் செய்து அவர்களின் அம்மா கர்ப்பமாக இருப்பதாகவும், தந்தையின் மூலம் சொல்லவைத்துள்ளார். இதைக்கேட்டு எதிர்முனையில் இருப்பவர்களின் ரியாக்‌ஷன்கள் மாறுகிறது. ஒவ்வொருவரும் வெவ்வேறு மாதிரி ரியாக்‌ஷன்கள் கொடுக்கும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RJ Balaji (@irjbalaji)