1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: சனி, 8 மே 2021 (00:30 IST)

கொரோனாவுக்கு உதவும் சித்த மருத்துவம்..

கொரோனாவுக்கு கைகொடுக்கும் சித்த மருத்துவம்:
 
கொரோனாவுக்கு சித்த மருத்துவம் கைகொடுத்து இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 
இன்று சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்தை அவர் ஆய்வு செய்தார். அங்கு தடுப்பூசி போடும் பணியையும் அவர் நேரில் கண்டறிந்தார்
Ads by 
 
இதன்பின் தமிழகத் செய்தியாளர்களை சந்தித்தபோது கொரோனா பாதிப்பில் சித்தமருத்துவம் கை கொடுத்து வருவதாகவும் எனவே மீண்டும் முழுவீச்சில் சித்த மருத்துவ சிகிச்சை தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்
 
மேலும் தமிழகத்தில் ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகளால் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக கூறிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள், வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகள் வீட்டில் இருக்கும் போதும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்