1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (16:47 IST)

அடுத்த வாரம் டீசர்… அதற்கடுத்த வாரம் டிரைலர் – வலிமை படக்குழு முடிவு!

வலிமை படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  பொங்கல் பண்டிகைக்கு வலிமை படம் வெளியாக உள்ளது.

இதையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக அடுத்தடுத்து டீசர் மற்றும் டிரைலரை அடுத்த வாரம் மற்றும் அதற்கடுத்த வாரத்தில் முன்னறிவிப்புகள் எதுவும் இன்றி திடீரென்று வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.