1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 3 நவம்பர் 2022 (18:44 IST)

’வாரிசு’ சிங்கிள் புரமோ: முழு பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

varisu song
’வாரிசு’ சிங்கிள் புரமோ: முழு பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது 
 
ரஞ்சிதமே ரஞ்சிதமே என்று தொடங்கும் இந்த பாடலை விஜய் பாடியுள்ளார் என்பதும் விவேக் எழுதி உள்ளார் என்பதும் தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த பாடல் முழுவதுமாக வரும் 5-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சற்று முன் வெளியாகிய இந்த பாடலின் வீடியோ 30 செகண்டுகள் மட்டுமே இருந்த போதிலும் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
 
வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva