1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 3 நவம்பர் 2022 (10:13 IST)

இன்னும் சில நிமிடங்களில் ‘வாரிசு’ அப்டேட்: தயாரிப்பு நிறுவனம் டுவிட்!

varisu
இன்னும் சில நிமிடங்களில் ‘வாரிசு’ படத்தின் அப்டேட் வெளியாக உள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தளபதி விஜய் நடித்து வரும் வரை ‘வாரிசு’ படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையில் வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் 10.45 மணி என்று பதிவு செய்யப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து ‘வாரிசு’ அப்டேட் இன்னும் சில நிமிடங்களில் வெளியாக  இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva