1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜனவரி 2021 (16:21 IST)

கிரிக்கெட் வீரரை திருமணம் செய்யப்போகிறாரா வரலட்சுமி?

நடிகை வரலட்சுமி கிரிக்கெட் வீரர் ஒருவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2012 ஆம் ஆண்டே வெளியான போடா போடி திரைப்படத்தில் அறிமுகமானாலும் வரலட்சுமிக்கு பிரேக் கிடைத்தது தார தப்பட்டை, சண்டக்கோழி, நீயா 2 , சர்க்கார் போன்ற படங்களில் நடித்த பின்னர்தான். அதன் பின்னர் தொலைக்காட்சி ஷோக்களிலும் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது இவர் டேனி மற்றும் வெல்வெட் நகரம் ஆகிய படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்
.
இதற்கிடையில் இவர் நடிகை விஷாலை காதலித்து அந்த காதல் திருமணம் வரை சென்று நின்றது. விஷாலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அந்த திருமணமும் நின்று போனது. இந்நிலையில் வரலட்சுமி இப்போது கிரிக்கெட் வீரர் ஒருவருடன் பழகி வருவதாகவும், விரைவில் அவர்கள் இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமனம் நடக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.