திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 12 டிசம்பர் 2020 (09:05 IST)

ரிஸ்க் எல்லாம் ரஸ்க் மாதிரி… வரிசையாக ஆக்‌ஷன் படங்களில் கமிட்டாகும் வாரிசு நடிகை!

நடிகர் வரலட்சுமி சரத்குமார் வரிசையாக 9 படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. வாரிசு நடிகையாக இருந்தாலும் முதலில் அவர் மேல் எந்த கவனமும் விழவில்லை. கடைசியில் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கான வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. தொடர்ந்து சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2 ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஆக்‌ஷன் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். அந்தவகையில் இவர் தமிழ் மற்றும் கன்னடத்தில் மொத்தமாக 9 படங்களை இப்போது கைவசம் வைத்துள்ளார். இந்த படங்களின் ஆக்‌ஷன் காட்சிகளில் எல்லாம் டூப் போடாமல் அவரே நடிக்கிறாராம்.