செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (13:19 IST)

சிம்புவின் ‘போடா போடி 2’: விக்னேஷ் சிவன், வரலட்சுமி உண்டா?

கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது சிம்புவின் வெற்றி பெற்ற படம் ஒன்றின் இரண்டாம் பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது
 
கடந்த 2012 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய ’போடா போடி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான் தற்போது உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு வரலட்சுமி நடிப்பில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ரசிகர்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை தயாரித்த குமார் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சிம்பு ஜோடியாக அறிமுக நடிகை ரித்திகாபால் என்பவர் நடிக்க இருப்பதாக அறிவித்த தயாரிப்பாளர் குமார், இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்றும் வேறு ஒரு இயக்குனர் இயக்க இருப்பதாகவும் அவருடைய பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார் 
 
முதல் பாகத்தில் இசையமைத்த தரண் குமார் இந்த படத்தில் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படமும் முதல் பாகம் போகவே இசை நடனம் சம்பந்தப்பட்ட படம் என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் என்றும் ஒரே ஷெட்யூலில் வெளிநாட்டில் இந்த படத்தை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
வித்தியாசமான கதையம்சம் கொண்ட ’போடா போடி’ திரைப்படம் போலவே இந்த படத்தின் இரண்டாம் பாகமும் இருக்கும் என்று கருதப்படுகிறது