திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2020 (11:36 IST)

ஸ்லம்டாக் மில்லியனர் இயக்குனர் பாராட்டிய இந்திய திரைப்படம்!

சமீபத்தில் நெட்பிளிக்ஸில் ஏகே vs ஏகே என்ற திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இயக்குனர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் அனில் கபூர் அவரின் மகள் சோனம் கபூர் ஆகியோர் நடிப்பில் விக்ரமாதித்யா மோத்வானி இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் ஏகே vs ஏகே. இயக்குனர் ஒருவர் நடிகரின் மகளைக் கடத்தி வைத்துவிட அந்த நடிகர் எப்படி அவரை தேடிக் கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. இதில் நடித்துள்ள நடிகர்கள் எல்லாம் நிஜ வாழ்வின் பெயரிலேயே நடித்துள்ளனர். இதனால் இந்த கதை உண்மையா அல்லது புனைவா என்பதே குழப்பமான ஒன்று. ஆனால் ரிலீஸானதில் இருந்து இந்த படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஸ்லம்டாக் மில்லியனர் இயக்குனர் டேனி பாய்ல் இந்த படத்தைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அதில் ‘இந்த படம் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது. சிறப்பான தொடக்கத்தையும் அதைவிட சிறப்பான முடிவையும் கொண்ட படம். மனிதர்களின் ஈகோவை சிறப்பாகக் காட்டியுள்ளது.  திரைப் பிரபலங்களைப் பற்றிய தவறான பிம்பங்களை இந்த படம் உடைத்துள்ளது. உண்மையிலேயே இந்த திரைப்படம் மிக மகிழ்ச்சியான அனுபவம்’ எனக் கூறியுள்ளார்.