பாஜகவில் சேரப்போகிறாரா இரண்டாம் குத்து இயக்குனர் – அடிக்கிற அடிக்கு வேற வழி இல்ல!

Last Modified செவ்வாய், 13 அக்டோபர் 2020 (11:10 IST)

இரண்டாம் குத்து படத்தின் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் பாஜகவில் சேர இருப்பதாக ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் பி கிரேட் படத்தைப் போல உருவான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து. 2018ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில்
கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா, கருணாகரன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அடல்ட் காமெடி ரசிகர்கள் மத்தியில் யங்ஸ்டர்ஸை குறிவைத்து வெளிவந்த இப்படம் ஓஹோன்னு ஓடியது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அதில் கதாநாயகனாக முதல் பாகத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமாரே கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் ஆகியவை சில தினங்களுக்கு முன்னர் வெளியாகின. அவை இரண்டும் ஆபாசத்தின் உச்சமாக இருப்பதாக தமிழ் சினிமாவில் இருந்தே எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் இந்த படத்தைத் தடை செய்ய சொல்லி அழுத்தம் அதிகமாகியுள்ளதால் அது குறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் படக்குழுவினர் பயங்கர அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. சமூகவலைதளங்களில் உள்ள நெட்டிசன்களோ படம் ரிலிசாகனும்னா ஒழுங்கா பாஜகவுல சேர்ந்துருப்பா என்பது போல கருத்து சொல்லி வருகின்றனர். அந்த முடிவை எடுப்பாரா இயக்குனர்?இதில் மேலும் படிக்கவும் :