வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2024 (17:30 IST)

வனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணமா? இன்ஸ்டாகிராம் போஸ்டரால் பரபரப்பு..!

நடிகை வனிதா விஜயகுமார் ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்ததாக கூறப்படும் நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண அழைப்பிதழ் போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார், இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை வனிதா விஜயகுமாரின் திருமண வாழ்க்கை சரியில்லாத நிலையில் அவர்  அடுத்த திருமணத்தை யோசிக்கவில்லை என்று கூறப்பட்டது. தற்போது, அவர் முழுமையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில், அவர் ராபர்ட் மாஸ்டர் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, "அக்டோபர் 5ஆம் தேதி முக்கியமான அறிவிப்புக்காக காத்திருக்கவும்" என்று கூறியுள்ளார்.

இதனால், வனிதா ராபர்ட் மாஸ்டரை திருமணம் செய்ய உள்ளாரா? அல்லது இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்களா ?என்ற குழப்பத்தில் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இருப்பினும் அக்டோபர் 5ஆம் தேதியன்று இந்த குழப்பத்திற்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.