வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2024 (09:09 IST)

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி! - தாய்லாந்து மன்னர் ஒப்புதல்!

LGBTQ

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களை அனுமதிக்கும் மசோதாவிற்கு தாய்லாந்து மன்னர் ஒப்புதல் அளித்த நிலையில் இந்த திருமணம் அதிகாரப்பூர்வமானதாக அறிவிக்கப்பட உள்ளது.

 

 

உலகம் முழுவதும் பல நாடுகளில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடர்பாக LGBTQ+ இயக்கத்தின் எழுச்சி சமீக காலங்களில் அதிகரித்துள்ளது. பல நாடுகளிலுல் தங்கள் திருமணத்தை அங்கீகரிக்க கோரி தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடர்ந்து கோரிக்கைகள், பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

 

தாய்லாந்திலும் அவ்வாறான கோரிக்கைகள் இருந்து வந்த நிலையில் தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக தாய்லாந்து மன்னரின் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
 

 

இந்நிலையில் தற்போது தாய்லாந்து மன்னரும் ஒப்புதல் அளித்துள்ளதால் தன்பாலின திருமணம் தாய்லாந்தில் அனுமதிக்கப்பட்டதாக மாறியுள்ளது. ஆசிய நாடுகளில் தைவான், நேபாள நாடுகளுக்கு பிறகு தன்பாலின திருமணத்தை அங்கீகரித்த மூன்றாவது நாடாக தாய்லாந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K