வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 22 மே 2021 (16:22 IST)

கொரோனா தேவியுடன் ஒப்பிட்ட நெட்டிசன்ஸ்… கடுப்பான வனிதா விஜயகுமார்!

சமீபத்தில் வைரலாக பேசப்பட்ட கொரோனா தேவி புகைப்படத்தோடு வனிதா விஜயகுமாரின் புகைப்படத்தை ஒப்பிட்டு நெட்டிசன்கள் மீம்களை உருவாக்கி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதனால் கொரோனா என்றாலே மக்கள் அஞ்சி நடுங்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் இருகூர் அருகே கொரோனாவை கடவுளாக பாவித்து கொரோனா தேவி சிலை அமைக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா தேவி சிலையை 48 நாட்கள் வைத்து பூஜை செய்து பின் பிரதிஷ்டை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கோயம்புத்தூர் மக்களை கேலி செய்து நெட்டிசன்கள் மீம்களை கிரியேட் செய்து பரப்பினர்.

இந்நிலையில் அந்த கொரோனா தேவியின் புகைப்படத்தோடு சர்ச்சை நாயகி வனிதா விஜயகுமாரின் புகைப்படத்தை சில மீம்கள் பரவ ஆரம்பித்தன. அதைப் பார்த்து கடுப்பான வனிதா ‘ஏன் எல்லோரும் இதை ஷேர் செய்கிறார்கள்?’ எனக் கோபத்தோடு கேள்வி எழுப்பியுள்ளார்.