செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 22 மே 2021 (16:12 IST)

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்… மோடி படத்தை தூக்கும் சதீஸ்கர் அரசு!

கொரோனா போட்டுக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் மோடியின் புகைப்படத்தை நீக்க சதீஷ்கர் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

சதீஷ்கர் மாநிலத்தில் 18 வயது முதல் 44 வயதுள்ளவர்களுக்கு போடப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடியின் புகைப்படத்துக்கு பதிலாக அம்மாநில முதல்வர் புபேஷ் பாகலின் படத்தை இடம்பெறச் செய்ய போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 18 வயது 44 வயதுள்ளவர்களுக்கான தடுப்புசிகள் வாங்குவதற்கு தமிழ்நாடு, கேரளா, சதிஷ்கர் உள்ளிட்ட சில மாநிலங்கள் உலகளாவிய ஒப்பந்த புள்ளிகளைக் கோரியுள்ளன. அதற்கான நிதியையும் மாநில அரசுகளே முதலீடு செய்ய உள்ளனர்.

இந்நிலையில் மாநில அரசின் நிதியில் வாங்கும் தடுப்பூசிகளில் தங்கள் மாநில முதல்வரின் புகைப்படமே இடம்பெறச் செய்வதில் என்ன தவறு என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி எஸ் சிங்கேதியா கேள்வி எழுப்பும் விதமாகக் கூறியுள்ளார். சதீஷ்கர் அரசின் இந்த முடிவுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் எழுந்துள்ளன.