அர்ஜுன் தாஸ்தான் தமிழ் சினிமாவின் ஷாருக் கான்… புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை!
கைதி படத்தில் கொடூரமான வில்லனாக நடித்தன மூலம் ரசிகர்கள் மனதில் அர்ஜுன் தாஸ், அதன் பின்னர் மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் ஹீரோவாக நடித்த அந்தகாரம் திரைப்படமும் நல்ல கவனத்தைப் பெற்றது. சமீபத்தில் ரிலீஸான விக்ரம் படத்தில் கூட அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். தற்போது வசந்தபாலன் இயக்கும் அநீதி படத்தில் கதாநாயகனாகவும் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அதில் படத்தில் நடித்துள்ள வனிதா விஜயகுமார் கலந்துகொண்டு பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. வனிதா விஜயகுமார் பேசும்போது அர்ஜுன் தாஸ் தான் தமிழ் சினிமாவின் ஷாருக் கான். இதை நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை. அநீதி திரைப்படம் ரிலீஸான பின்னர் நான் சொன்னதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்” எனப் பேசியுள்ளார்.
அர்ஜுன் தாஸ் விரைவிலேயே பாலிவுட் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். பாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ள மலையாள ஹிட் படமான அங்கமாலி டைரீஸ் ரீமேக்கில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் மதுமிதா இயக்க உள்ளார். மேலும் டேவிட் மற்றும் சோலோ ஆகிய படங்களின் இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் ஒரு படத்திலும் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.