வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 10 ஜூலை 2023 (07:51 IST)

சமரசமின்றி அநீதி படத்தை இயக்கியுள்ளேன்… இயக்குனர் வசந்தபாலன் கருத்து!

இயக்குனர் வசந்த பாலன் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் அநீதி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை அவரே தன்னுடைய பள்ளி நண்பர்களோடு இணைந்து தயாரித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி வெளியிடுகிறது. இந்த படம் ஜூலை 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்துஇல் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் வசந்த பாலன் “எளியோருக்கான நீதியை உரக்கச் சொல்லும் விதமாக அநீதி திரைப்படம் உருவாகியுள்ளது. நீதி கிடைக்காதவர்களின் குரலாக இந்த படம் இருக்கும். மொத்த உலகமுமே சிறு அன்பை எதிர்பார்த்துதான் சுழல்கிறது. அதை இந்த படத்தில் சொல்ல முயற்சித்துள்ளோம்.

இயக்குனர் ஷங்கர் சார் வெயில் படம் மூலம் எனக்கு வாய்ப்பளித்தார். இப்போது நான் படத் தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பதைத் தெரிந்து இந்த படத்தை வழங்க முன்வந்துள்ளார்.  இந்த படத்தை எவ்வித சமரசமும் இன்றி இயக்கியுள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.