செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (17:44 IST)

கவினை பற்றி ட்வீட் போட்ட வனிதா - அடுத்த ஆதரவு இந்த போட்டியாளருக்குதானாம்!

மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்களுள் முக்கியமானவர் கவின். ஆரம்பத்திலிருந்து அடுத்தடுத்து மூன்று பெண்களை காதலிப்பதாக கூறி மக்களிடம் அதிக வெறுப்பை சம்பாதித்தார். இதை அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டு  பிக்பாஸ் அறிவித்திருந்த 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகையை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று வெளியேறினார். 


 
இது சக போட்டியாளர்களாக சாண்டி மற்றும் லொஸ்லியாவுக்கு மிகுந்த மன வருத்தத்தை தந்தது. மேலும் கவின் ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வந்தனர். பின்னர் கவின் ஆர்மிஸ் அனைவரும் சேர்ந்து லொஸ்லியாவுக்கு ஆதரவு கொடுக்கவுள்ளதாகவும் கூறி வருகின்றனர். 
 
அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டின் முன்னாள் போட்டியாளர் வனிதா கவின் வெளியேறியதை குறித்து ட்விட் போட்டுள்ளார். அதாவது " நான் கவினுக்கு சல்யூட் அடிக்கிறேன்  அவன் இந்த வாய்ப்பிற்காகதான் காத்துக் கொண்டிருந்துள்ளான். இதற்கான அவன் எந்தவொரு ரூலையும் பிரேக் செய்யவில்லை. டிராமா போடவில்லை என கூறி #kavinarmy என டேக் செய்துள்ளார். 
 
மேலும், என்னுடைய ஒட்டு லொஸ்லியாவுக்கு தான். இது என்னுடைய நேர்மையான தனிப்பட்ட கருத்து. நான் அவரை அருகில் இருந்து பார்த்துள்ளேன் "அவள் ஒரு டார்லிங் " மற்ற நபர்கள் மீது எனக்கு எந்த ஒரு தனிப்பட்ட வஞ்சமும் இல்லை. மற்ற போட்டியாளர்களை ஒப்பிட்டு பார்க்கையில்  லொஸ்லியா தான் என்னுடைய சிறந்த தேர்வு என கூறி பதிவிட்டுள்ளார்.