புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (09:31 IST)

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா வனிதா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின் மற்றும் வனிதா ஆகிய ஐவரில் ஒருவர் வெளியேறவுள்ள நிலையில் இன்றைய முதல் புரமோவில் கமல் தோன்றி, எவிக்சனில் உள்ளவர்களில் யார் வெளியேறுவார்கள் என்று உங்களுக்குள்ளேயே ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் என்று கூற அதற்கு அனைவரும் தலையாட்டி மெளனம் காக்கின்றனர். இருப்பினும் இந்த வாரம் வனிதா வெளியேறிவிட்டதாக நேற்று நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் டுவீட் செய்துள்ளார்கள்
 
பிக்பாஸ் வரலாற்றில் போட்டியில் இருந்து வெளியேறி ஒருவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது இல்லை. ஆனால் முதல்முறையாக அந்த வாய்ப்பை பெற்ற வனிதா, தனது வாயாடித்தனத்தால் பொன்னான வாய்ப்பை இழந்தார். குறிப்பாக ஷெரின் - தர்ஷன் விவகாரத்தில் வனிதாவின் தலையீடு எல்லை மீறியது என்பதே பெரும்பாலானோர்களின் கருத்தாக உள்ளது.
 
கடந்த இரண்டு நாட்களாக வனிதா பொறுமையின் சிகரமாக உள்ளார். இதேபோல் ஆரம்பத்தில் இருந்து இருந்திருந்தால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. வனிதாவின் கருத்துக்கள் பல நியாயமானதாக இருந்தாலும் அவர் சொல்லும் முறை தவறு என்பதால் அவர் மீது போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் அதிருப்தி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது