செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 16 நவம்பர் 2020 (18:30 IST)

லாஸ்லியாவிடம் போனில் பேசிய வனிதா: என்ன நடந்தது?

லாஸ்லியாவிடம் போனில் பேசிய வனிதா: என்ன நடந்தது?
பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியாவின் தந்தை கனடாவில் நேற்று இரவு திடீரென காலமானதாக வெளிவந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
 
இந்த செய்தி அறிந்த லாஸ்லியா கடும் அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் யாருடனும் பேசாமல் அறையில் முடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன
 
இந்த நிலையில் நடைபெறும் லாஸ்லியாவின் சக போட்டியாளர்களில் ஒருவரான வனிதா விஜயகுமார் லாஸ்லியாவுக்கு போன் செய்ததாகவும் அவர் ஆறுதல் கூறியதோடு தன்னால் முடிந்த உதவியை செய்வதாகவும் கூறி உள்ளார் இதனையடுத்தே லாஸ்லியா ஆறுதல் அடைந்ததாக தெரிகிறது 
 
இந்த நிலையில் தற்போது சென்னையில் இருக்கும் லாஸ்லியா இலங்கை செல்வதற்காக விசா உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்கு விஜய் டிவி நிர்வாகம் உதவி செய்து வருவதாக தெரிகிறது
 
இருப்பினும் கனடாவில் காலமான லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் அவர்களின் உடல் இலங்கைக்கு வருவதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் ஆகும் என்றும் கொரோனா வைரஸ் கெடுபிடி காரணமாக இந்த தாமதம் ஆவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் லாஸ்லியாவுக்கு தொலைபேசி மூலம் லாஸ்ல்யாவை அழைத்து அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர் என்பதும் இதனால் அவர் சற்று ஆறுதலாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது