1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 4 ஜனவரி 2023 (15:46 IST)

பாலா படத்தை தயாரிக்கும் பிரபல நடிகர்- லேட்டஸ்ட் தகவல்!

இயக்குனர் பாலா இயக்கி வந்த வணங்கான் திரைப்படத்தில் இருந்து சூர்யா வெளியேறிவிட்டார்.

சூர்யா நடித்து, தயாரித்து இயக்குனர் பாலா இயக்கத்தில் 40 நாட்கள் வரை ஷூட்டிங் நடந்த வணங்கான் திரைப்படத்தில் இருந்து சூர்யாவும் அவரின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் வெளியேறி விட்டன.

ஆனால் பாலா தொடர்ந்து வணங்கான் படத்தை இயக்குவார் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க அதர்வாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது அருண்விஜய் வணங்கான் படத்தில் நடிக்க உள்ளதாகவும், மேலும் அவரே அந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் வெளியாகியுள்ளன.