1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (13:49 IST)

ஜி வி பிரகாஷ் நடித்துள்ள வணக்கம்டா மாப்ள டிரைலர் ரிலீஸ்!

எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடித்துள்ள வணக்கம்ட மாப்ள படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஏற்கனவே சுமார் 10 திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த திரைப்படத்திற்கு ’வணக்கம்டா மாப்ள’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே ராஜேஷ் ஜி வி பிரகாஷ் கூட்டணியில் உருவான கடவுள் இருக்கான் குமாரு திரைப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.