வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 28 ஜூன் 2021 (15:48 IST)

ஜூலை 15…நல்ல செய்தி வருகிறது அஜித் ரசிகர்களுக்கு!

வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 15 ஆம் தேதி வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் ரசிகர்களுக்காக இதுவரை ஒரு போஸ்டர் கூட வெளியிடாமல் இழுத்தடித்து வருகிறது படக்குழு. இது சம்மந்தமாக முன்னதாக போனி கபூரை கேலி செய்யும் விதமாக சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதும், அரசியல் மேடைகள் மற்றும் கிரிக்கெட் மைதானங்களில் வலிமை அப்டேட் கேட்பது என அஜித் ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் சுற்றி வந்தனர். இதையடுத்து மே 1 அன்று அஜித் பிறந்தநாளில் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் ஜூலை மாதத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்ய வலிமை படக்குழு ஆலோசித்து வருகிறதாம். இதையடுத்து ஜூலை 15 ஆம் தேதி வியாழக் கிழமை ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.