வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 31 ஜனவரி 2020 (21:00 IST)

வலிமை பட தயாரிப்பாளருக்கு திடீரென கிடைத்த 30 கோடி ரூபாய்: படக்குழு மகிழ்ச்சி

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் ஹைதராபாத் மற்றும் சென்னை படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் பிப்ரவரி முதல் வாரம் முதல் இந்த படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ‘வலிமை’ படத்தை ஜீடிவி மற்றும் போனிகபூர் இணைந்து தயாரித்து வந்த நிலையில் திடீரென ஜீடிவி இந்த படத்தின் தயாரிப்பில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து போனிகபூருக்கு பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டதால் சில நாட்கள் படப்பிடிப்பை நிறுத்தும்படி நிறுத்தும் நிலை ஏற்படுமோ? என அஞ்சப்பட்டது 
 
ஆனால் ‘வலிமை’ படத்தில் அஜீத் மற்றும் ஹெச்.வினோத் மீது நம்பிக்கை கொண்ட மூன்று விநியோகிஸ்தர்கள் தாமாகவே முன்வந்து போனிகபூரிடம் தங்களுக்கு ‘வலிமை’ படத்தின் தமிழக உரிமையை கொடுத்தால் ரூபாய் 30 கோடி அட்வான்ஸ் கொடுப்பதாக கூறினார்களாம். இதனை ஏற்றுக்கொண்ட போனிகபூர், அவர்களிடம் 30 கோடி ரூபாய் பெற்று படத்தை தொடர்ந்து தயாரிக்க முடிவு செய்துள்ளாராம்
 
போனிகபூர் பொருளாதார சிக்கலில் இருந்த நிலையில் திடீரென 30 கோடி ரூபாய் கிடைத்திருப்பது அவருக்கும் படக்குழுவினர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது