தொடங்கியது வலிமை ஷூட்டிங்… அஜித் எப்போது கலந்துகொள்வார்?

Last Modified வெள்ளி, 23 அக்டோபர் 2020 (15:39 IST)

வலிமை படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டுள்ளது. இதனால் வலிமை படத்தைப் பற்றிய அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் சில காட்சிகள் சென்னையில் படம் பிடிக்கப்பட்ட நிலையில் இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பை டெல்லியில் நடத்தலாம் என படக்குழு முடிவு செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போது சம்மந்தப்பட்ட இடத்தில் அனுமதி வழங்க மறுத்துள்ளது டெல்லி அரசு. இதனால் அந்த காட்சிகளை அப்படியே வைத்துவிட்டு அஜித் இல்லாத காட்சிகளை இப்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் படமாக்கி வருகிறாராம் ஹெச் வினோத். விரைவில் அஜித் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :