செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (07:10 IST)

'வலிமை’ படத்தின் அம்மா பாடலின் வரிகள்: இணையத்தில் வைரல்!

அஜித் நடித்த 'வலிமை’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் நேற்று வெளியானது என்பதும் அம்மா சென்டிமென்ட் கொண்ட இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்த பாடலின் முழு வரிகள் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகின்றன. விக்னேஷ் சிவன் எழுதிய இந்த அம்மா சென்டிமென்ட் பாடலின் ஒவ்வொரு வரியை படிக்கும்போது நமது அம்மாவையே ஞாபகப்படுத்தும் அளவுக்கு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாடலின் முழு வரிகள் இதோ:
 
நான் பார்த்த முதல் முகம் நீ
நான் கேட்ட முதல் குரல் நீ
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே
 
நான் வாழ்ந்த முதல் அறை நீ
நான் வரைந்த முதல் படம் நீ
நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே
 
சிணுங்கிய போது சிரிக்க வைத்தாய்
சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்
சிகரங்கள் ஏற சொல்லிக் கொடுத்தாய்
ஆவலோடுதான்
 
வளர்ந்தவன் போல தெரிந்தாலும்
உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை
இமைகளுக்குள்ளே அடைகாத்தாய்
ஆசையோடு
 
அம்மா என் முகவரி நீ அம்மா
அம்மா என் முதல் வரி நீ அம்மா
அம்மா என் உயிர் என்றும் நீ அம்மா
 
நீயே எனக்கெனவே பிறந்தாயே
என் அனைத்தையும் தந்தாயே
என் உலகமே என் தாயே
 
உன் வார்த்தை எனக்கு வலிமை தரும்
உன் வார்த்தை எனக்கு வீரம் தரும்
உன் வாழ்க்கையிலே என் வாழ்க்கையினை வரைந்து வைத்தாயே
 
ஒரு தோல்வி என்னை தொடும்போது
என் தோளை வந்து தொடுவாயே
நீ தொட்டதுமே துலங்கிடுமே
எல்லாம் மாறுமே
 
விடுமுறையே இல்லாமல் தாய் வேலை செய்தாயே
இதற்கான காணிக்கையாய் நான் என்ன தான் தருவேனோ..
அம்மா ... ஓ அம்மா.. அம்மா ஆ ஆ ஆ
 
அம்மா என் முகவரி நீ அம்மா
அம்மா என் முதல் வரி நீ அம்மா
அம்மா என் உயிர் என்றும் நீ அம்மா
 
நீயே எனக்கெனவே பிறந்தாயே
என் அனைத்தையும் தந்தாயே
என் உலகமே என் தாயே