1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 12 ஜூலை 2021 (08:22 IST)

சொதப்பிய வலிமை போஸ்டர்: அப்டேட்டால் அஜித் ரசிகர்கள் அப்செட்!

வலிமை மோஷன் போஸ்டர் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

 
எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலு குட்டி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இணையதளங்களில் வைரலானது. 
 
சுமார் 1 நிமிடம் 23 விநாடிகள் ஓடும் வலிமை போஸ்டரை, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அப்டேட் கிடைக்கிறது என ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடினாலும், இன்னொருபுறம் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
 
ஆம், இந்த மோஷன் போஸ்டர் முழுக்க முழுக்க போனி கபூரின் மேற்பார்வையில் உருவாகியுள்ளது. இதனால் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு அப்பாற்பட்டு, ஹிந்தி திரைப்பட பாணியில் காட்சி அளிக்கின்றன என்று கூறப்படுகிறது. இந்த மோஷன் போஸ்டரில் ஆறுதல் அளிப்பது யுவனின் இசை மட்டுமே...