வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 11 ஜூலை 2021 (18:40 IST)

மோஷன் போஸ்டரை அடுத்து ஹெச்டி போஸ்டர்கள்: திக்குமுக்காடிய அஜித் ரசிகர்கள்!

தல அஜித் நடித்த ’வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் சற்று முன் வெளியான நிலையில் இந்த மோஷன் போஸ்டர் வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது
 
இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’வலிமை’ படத்தின் ஹெச்டி போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். இரண்டுவிதமான போஸ்டர்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர்களை அஜித் ரசிகர்கள் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றனர் 
 
இரண்டு ஆண்டுகளாக அப்டேட் கேட்டு கேட்டு சலித்துப்போன அஜித் ரசிகர்களுக்கு தற்போது படக்குழுவினர் திக்குமுக்காடும் வகையில் அடுத்தடுத்து அப்டேட்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது