வலிமை படத்தின் நடிகர், நடிகைகள் இவர்கள் தான்: படக்குழுவினர்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு!
அஜித் நடித்த வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் அதன் ஹெச்டி போஸ்டர்கள் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த போஸ்டர்களில் உள்ள ஹேஷ்டேக்குகளில் இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து தற்போது பார்ப்போம்
வலிமை படத்தின் நாயகி ஹுமா குரேஷி என்பதும், வில்லன் கார்த்திகேயா என்பதும் மற்றும் பாணி, சுமித்ரா, அச்சுந்த் குமார், ராஜ் அய்யப்பா, குக் வித் கோமாளி பிரபலம் புகழ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டியின் எடிட்டிங்கில் திலீப் சுப்புராயன் ஸ்டன்ட்டில் கதிரின் கலை வண்ணத்தில் வலிமை உருவாகி வருவதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.