1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (15:54 IST)

அதிகரிக்கும் ஒமிக்ரான்; தமிழகத்தில் ஊரடங்கா? – 31ம் தேதி ஆலோசனை!

வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸால் தமிழகத்தில் ஊரடங்கிற்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்து 31ம் தேதி ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியாவிலும் மொத்த பாதிப்புகள் 500 ஐ தாண்டியுள்ளன. இதனால் மாநில அரசுகள் ஒமிக்ரான் பரவலை தடுக்க வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்தி பரிசோதித்து வருகின்றனர்.

ஒமிக்ரான் பாதிப்பை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ளவும், தேவைப்பட்டால் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பகுதி நேர ஊரடங்கு அல்லது உள்ளூர் முழு ஊரடங்கு போன்றவற்றை அமல்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்திலும் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 100ஐ நெருங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பேசிய மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டிசம்பர் 31ம் தேதி முதல்வரின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதற்கு பின் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.