1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (10:22 IST)

பாரதிராஜாவை மருத்துவமனையில் பார்த்தேன்: வைரமுத்து டுவிட்

vairamuthu
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாக செய்திகள் வெளியான நிலையில் பாரதிராஜாவை மருத்துவமனையில் சென்று பார்த்தேன் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாரதிராஜாவை பார்த்ததை கவிதை வடிவில் கூறியுள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:
 
பாரதிராஜா
மருத்துவமனையில்
பாரதிராஜாவைப் பார்த்தேன்
 
நலிந்த நிலையிலும்
நகைச்சுவை தீரவில்லை
 
சின்னச் சின்னப்
பின்னடைவுகளைச் சீர்செய்ய
சுத்த மருத்துவர்கள்
சூழ நிற்கிறார்கள்
 
அல்லி நகரத்தை
டில்லி நகரத்திற்கு
அழைத்துச் சென்ற
மகா கலைஞன்
விரைவில்
மீண்டு வருவார்
கலையுலகை 
ஆண்டு வருவார்