திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (14:57 IST)

தந்தை பெயரில் இலவச மருத்துவமனை: நடிகர் சிரஞ்சீவிக்கு ஆளுனர் தமிழிசை பாராட்டு!

chiranjeevi
தந்தை பெயரில் இலவச மருத்துவமனை கட்ட முடிவு செய்திருக்கும் நடிகர் சிரஞ்சீவிக்கு தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார் 
 
நடிகர் சிரஞ்சீவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார். இந்த நிலையில் தனது தந்தையின் பெயரில் இலவச மருத்துவமனை ஒன்றை கட்ட இருப்பதாகவும் அடுத்த வருடம் தனது பிறந்த நாளில் இந்த மருத்துவமனை திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
 
இந்த மருத்துவமனை கட்டுவதற்காக தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலர் நிதி உதவி செய்வதாகவும் அறிவித்துள்ளனர். இதுகுறித்து சிரஞ்சீவி கூறியபோது நான் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தது தெலுங்கு திரையுலகம் மூலம்தான், எனவே தற்போது தெலுங்கு திரையுலகிற்கு நான் திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம் உள்ளது
 
 எனவே இந்த மருத்துவமனையை கோடிக்கணக்கில் செலவு செய்து காட்டுவேன் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவு எடுக்கும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.