திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 4 செப்டம்பர் 2021 (17:25 IST)

தமிழ் & திராவிடம் என்றால் என்ன? மோதல்களுக்கு வைரமுத்து விளக்கம்!

தமிழ் இலக்கியங்களை தொகுத்து அதற்கு திராவிட களஞ்சியம் என பெயர் சூட்டுவதற்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பழந்தமிழ் இலக்கியங்கள், நூல்களை “திராவிட களஞ்சியம்” என்ற பெயரில் தொகுக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தமிழ் தேசிய அமைப்புகள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். அதுபோலவே இணையத்திலும் இது சம்மந்தமாக இரு தரப்பினரும் உக்கிரமாக மோதிக் கொள்கின்றனர்.

இந்நிலையில் தமிழ் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து ‘தமிழ் என்பது மொழி குறிக்கும் சொல்லென்றும், திராவிடம் என்பது இனக்குழு மற்றும் கலாசாரம் குறிக்கும் சொல்லென்றும் முன்னோர்கள் சொன்னார்கள். இரண்டு சொற்களுக்குமான கால இடைவெளியில் படையெடுப்பு வரலாறு படிந்துள்ளது என்று புரிந்து கொண்டால் இந்தக் கருத்துக் கலகம் முற்றுப்பெறும் என்று கருதலாம்’ எனக் கூறியுள்ளார்.