மின்னல் வேகத்தில் ‘கேங்கர்ஸ்’ பட ஷூட்டிங்கை முடித்த சுந்தர் சி
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆனது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சுந்தர் சி கலகலப்பு மூன்றாம் பாகத்தை எடுக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் திடீரென்று அந்த படம் கிடப்பில் போட்டுவிட்டு வடிவேலுவுடன் இணைந்து கேங்கர்ஸ் படத்தை எடுத்து வருகிறார்.
இந்த படத்தின் மூலம் வடிவேலு சுந்தர் சி காம்பினேஷன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் தென்காசியில் தொடங்கிய நிலையில் அங்கு 30 நாட்களுக்கு மேல் நடந்தது. அதையடுத்து இறுதிகட்ட ஷூட்டிங் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.
இந்த படத்தை சுந்தர் சி யின் அவ்னி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, சத்யா இசையமைக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதியில் படம் ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது.