வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 10 டிசம்பர் 2021 (16:50 IST)

வடிவேலுவின் ''நாய் சேகர் ரிட்டன்ஸ்'' பட மோஷன் போஸ்டர் ரிலீஸ்

வடிவேலு நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது ரிலீஸாகியுள்ளது.
 
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் வடிவேலு நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ்  என்ற திரைப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இப்படத்தின்  டைட்டிலுடன் கூடிய மோஷன்  போஸ்டர் எப்போது  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று இப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 
 
இதில், வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் வடிவேலு மோட்டார் பைக்கில் நாய்களை ஏற்றி வருவது போன்ற புகைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.