வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சுவரொட்டிகள்
Written By papiksha
Last Updated : புதன், 11 மார்ச் 2020 (18:06 IST)

மிஸ்கின் பெயர் இல்லாமல் வெளியான "துப்பறிவாளன் 2" பர்ஸ்ட் லுக் போஸ்டர்...!

நடிகர் விஷால் இயக்கி நடிக்கும் துப்பறிவாளன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கி வந்த ‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகியதாக கூறப்பட்டது. மிஷ்கின் விஷாலிடம் அதிக பணம் கேட்டதாகவும் இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் மீதி பகுதியை விஷாலே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் விஷாலுடன் பிரசன்னா, கெளதமி, ரகுமான், அஷ்யா உள்ளிட்டோர் நடிக்க இசைஞானி இளையராஜா இசையமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது.  இந்த போஸ்டரில் விஷால் மற்றும் இளையராஜா இருவரது பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மிஷ்கின் பெயர் இடம்பெறவில்லை என்பது அழுத்தமான கூடுதல் தகவல்.