திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 மார்ச் 2020 (16:45 IST)

விஷால் இயக்கத்தில் அடுத்து நான் நடிப்பேன்! – ஆர்யா தடாலடி!

விஷால் இயக்கும் அடுத்த படத்தில் தான் நடிக்கப்போவதாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான படம் ‘துப்பறிவாளன்’. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ’துப்பறிவாளன் 2’ படப்பிடிப்பு தொடங்கி வெளிநாடுகளில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மிஷ்கின் – விஷால் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். அதனால் அந்த படத்தை தயாரித்து, நடித்து வந்த விஷாலே அதை இயக்க போவதாகவும் அறிவித்துள்ளார்.

துப்பறிவாளன் 2 படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராகவும் களம் காண உள்ள விஷாலுக்கு திரைத்துறையினர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் துப்பறிவாளன் 2 படத்தில் நடைபெற்ற பிரச்சினைகள் குறித்து சூசகமாக தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாட் விஷால்.

விஷாலின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ள நடிகர் ஆர்யா ”வாழ்த்துக்கள் மச்சான். நீ இதற்கு சரியான ஆள். இதுதான் சரியான நேரம்” என்று கூறியுள்ளார். மேலும் ’உன்னுடைய இயக்கத்தில் இரண்டாவது படம் என்கூடதான்” என நகைச்சுவையாக பதிவிட்டிருக்கிறார். விஷால் இயக்கத்தில் வெளியாகும் துப்பறிவாளன் 2 வெற்றிபெற்றால் அடுத்ததாக ஆர்யாவை வைத்து விஷால் படம் இயக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.