1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (17:09 IST)

ராஷ்மிகாவிடம் முத்தம் வாங்கிய அதிர்ஷ்டசாலி!

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது செல்ல நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. படங்களில் மட்டுமில்லாமல் சமூகவலைதளங்களிலும் இவர் ஒரு சூப்பர் ஸ்டார்தான். அந்த அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இத்தனைக்கும் தமிழில் அவர் நடித்த சுல்தான் படம் மட்டுமே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் தொடர்ந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அதனால் அவருக்கு மிகப்பெரிய அளவில் பாலோயர்ஸ் உள்ளனர். இப்போது தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக பாலோயர்ஸ் கொண்டவராக உருவாகியுள்ளார். அவரை 2 கோடி பேர் இன்ஸ்டாவில் பின் தொடர்கின்றனர்.

இதனால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் அதிக கவனத்தைப் பெறுகின்றன. இந்நிலையில் தனது செல்ல நாய்க்குட்டிக்கு உதட்டில் முத்தம் கொடுத்து புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர ரசிகர்கள் இப்போது அந்த நாய் மேல் பொறாமையில் பொங்கி வருகின்றனர்.