வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2024 (07:34 IST)

நல்ல விமர்சனம் வந்தும் கலெக்‌ஷனில் டல்லடிக்கும் வடக்குப்பட்டி ராமசாமி! விநியோகஸ்தர் ஆதங்கம்!

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்ட இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கி உள்ளார் என்பதும் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தானம் கார்த்திக் யோகி கூட்டணி ஏற்கனவே டிக்கிலோனா என்ற வெற்றிபடத்தைக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த வாரம் அதிக அளவிலான திரைகளில் இந்த படம் ரிலீஸ் ஆனது. படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ரிலீஸுக்குப் பிறகு நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் பெரியளவில் கலெக்‌ஷன் இல்லையாம்.

இது சம்மந்தமாக விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமண்யம் “வடக்குப்பட்டி ராமசாமி படம் சிறப்பாக இருந்தும் எதிர்பார்த்த கலெக்‌ஷன் இல்லை” என தங்கள் வாட்ஸ் ஆப்பில் குரூப்பில் புலம்பியுள்ளாராம். அடுத்த வாரம் லால் சலாம் மற்றும் லவ்வர் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதால் வரும் வாரத்தில் மேலும் வசூல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.