செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (07:03 IST)

லால் சலாம் டிரைலர் ரிலீஸ்.. முன்னாள் மனைவிக்கு வாழ்த்து கூறிய தனுஷ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம்  திரைப்படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியான நிலையில் இந்த படம் வெற்றி பெற லால் சலாம்  படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு அவருடைய முன்னாள் கணவர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்

நேற்று வெளியான லால் சலாம் ட்ரெய்லரில் ரஜினிகாந்த் மாஸ் காட்சிகள் மற்றும் மத நல்லிணக்கத்திற்கு உரிய காட்சிகள் இருந்தது என்பதும் இந்த ட்ரெய்லரின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று லால் சலாம்  படத்தின் டிரைலர் வெளியான சில நிமிடங்களில் நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் டிரைலரை பகிர்ந்து படம் வெற்றி பெற தனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை விட்டு தனுஷ் பிரிந்தாலும் அவருக்கு அவ்வப்போது வாழ்த்து சொல்ல தனுஷ் தவறுவது இல்லை என்ற நிலையில் நேற்றைய ட்ரெய்லர் ரிலீஸ் நாளிலும் அவர் வாழ்த்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Edited by Siva