1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2024 (19:11 IST)

7 மணிக்கும் வரவில்லை.. என்ன தான் ஆச்சு ‘லால் சலாம்’ டிரைலர்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

ஆனால் மாலை ஐந்து மணிக்கு லைக்கா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் தொழில்நுட்ப காரணங்களால் இன்று இரவு ஏழு மணிக்கு லால் சலாம் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று அறிவித்தது.

ஆனால் 7 மணியை தாண்டியும் டிரைலர் இன்னும் வெளியாகாததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஒரு சூப்பர் ஸ்டார் நடித்த படத்தின் டிரைலரை வெளியிடுவதில் கூட என்ன தொழில்நுட்ப சிக்கல்? இதைக் கூட சரி செய்ய முடியாமல் என்ன ஒரு தயாரிப்பாளர்? என  லால் சலாம் படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்தை ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சரியாக எப்போதுதான் டிரைலரை வெளியிடுவீர்கள் என்பதை சொல்லுங்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ள  நிலையில் லைகா நிறுவனம் இதற்கு என்ன விளக்கம் தரப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Edited by Siva