திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2024 (14:57 IST)

இன்று வெளியாகிறது மணிகண்டனின் லவ்வர் பட டிரைலர்!

கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இந்த படத்தில் ஜெய்பீம் புகழ் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

விறுவிறுப்பாக இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு லவ்வர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து படத்தின் டீசர் வெளியானது. படத்தில் டாக்ஸிக் காதலராக மணிகண்டன் நடித்திருப்பது தெரியவந்தது.

இந்த படம் லால் சலாம் படத்துடன் பிப்ரவரி 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. நேற்று இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா சென்னையில் நடந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.