வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 22 மே 2024 (07:22 IST)

வடக்கன் படத்துக்கு வந்த சிக்கல்… இயக்குனர் பாஸ்கர் சக்தி வெளியிட்ட பதிவு!

எழுத்தாளராகவும், திரைப்பட வசனகர்த்தாவாகவும் அறியப்படும் பாஸ்கர் சக்தி முதல் முறையாக ஒரு படத்தை இயக்கியுள்ளார். எம்டன் மகன், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் பாஸ்கர் சக்தி, பல சின்னத்திரை சீரியல்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். இந்த படத்தை டிஸ்கவரி சினிமாஸ் மூலமாக புத்தக பதிப்பாளர் வேடியப்பன் தயாரிக்கிறார்.

பாஸ்கர் சக்தி இயக்கத்தில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள வடக்கன் திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களைப் பற்றிய படமாக வடக்கன் உருவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த படம் மே மாதம் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதன் இயக்குனர் பாஸ்கர் சக்தி முகநூல் வாயிலாக அறிவித்து இருந்தார்.

ஆனால் இப்போது படத்தின் ரிலீஸுக்கு ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இது சம்மந்தமாக இயக்குனர் பாஸ்கர் சக்தி தன்னுடைய முகநூல் பக்கத்தில் “வணக்கம்,  வரும் வெள்ளிக்கிழமை (24/05/24) அன்று திரைக்கு வர இருந்த `வடக்கன்’ திரைப்பட ரிலீஸ் தள்ளிப் போகிறது. வடக்கன் என்கிற தலைப்பை சென்சார் போர்ட் அனுமதிக்க மறுத்ததின் காரணமாக ஏற்பட்ட தாமதத்தால் திரைப்படத்தை திட்டமிட்ட தேதியில் வெளியிட இயலவில்லை. படத்தின் தலைப்பு மாற்றப்பட்டு. வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.