1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 1 மே 2024 (08:15 IST)

வடக்கன் படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா? தயாரிப்பாளர் வெளியிட்ட அப்டேட்!

எழுத்தாளராகவும், திரைப்பட வசனகர்த்தாவாகவும் அறியப்படும் பாஸ்கர் சக்தி முதல் முறையாக ஒரு படத்தை இயக்கியுள்ளார். எம்டன் மகன், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் பாஸ்கர் சக்தி, பல சின்னத்திரை சீரியல்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். இந்த படத்தை டிஸ்கவரி சினிமாஸ் மூலமாக புத்தக பதிப்பாளர் வேடியப்பன் தயாரிக்கிறார்.

பாஸ்கர் சக்தி இயக்கத்தில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள வடக்கன் திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களைப் பற்றிய படமாக வடக்கன் உருவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் வடக்கன் திரைப்படத்தை மே 17 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் வேடியப்பன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதே தேதியில் விஜய்குமார் நடிக்கும் எலக்‌ஷன் திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது.